சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி


யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் நேற்று  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு நீண்ட நாட்களாகியும் விடுமுறை வழங்கப்படவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தமக்கு விடுமுறை வழங்குமாறு கேட்டுள்ளார்.

எனினும் அவருக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் மன விரக்தி அடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவ்வாறு பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.