கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களின் உலகம்


 ஐ.பி.எல்., போட்டியில் மும்பை அணிக்கு எதிராக கோஹ்லியின் பெங்களூரு அணி பெற்ற வெற்றியால் அனுஷ்கா சர்மா உற்சாகத்தில் உள்ளார்.

பெங்களூரு அணிக்காக முதல் ஓவரை வீசிய தமிழக ‘சுழல்’ வீரர் வாஷிங்டன் சுந்தர், ரோஹித்தை வெளியேற்றினார். 4 ஓவரில் 12/1 ஓட்டங்கள் மட்டும் கொடுத்தார். அவர் கூறுகையில்,‘‘பெங்களூரு அணி வெற்றிக்கு எந்த வகையிலும் உதவ தயாராக உள்ளேன். மும்பை போன்ற சிறந்த அணிக்கு எதிராக எனது வேலையை சரியாகச் செய்தது மகிழ்ச்சி. தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. என்மீது எனது அணியின் தலைமை அதிகமான நம்பிக்கை வைத்துள்ளது உற்சாகம் தருகிறது,’’ என்றார்.

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களின் உலகமாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து சென்ற வாஷிங்டன் சுந்தர், 2020 ஐ.பி.எல்., தொடரில் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு ‘ஸ்பெஷல்’ பாராட்டு,’ என தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.