தியாகி திலீபன் அவர்களின் , 33 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-பின்லாந்து!📸

தியாகி திலீபன் அவர்களின் , 33 வது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு இன்று , பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில் நடைபெற்றது .


ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகளில் , அனைத்து மாவீரர்களிற்கும் உறவுகளிற்குமாக அகவணக்கம் செலுத்தப் பட்டது. 


தொடர்ந்து கலைநிகழ்வுகளின் வரிசையில், எழுச்சிப்பாடலுக்கான நடனம், திலீபன் நினைவுக்கவிதைகள், திலீபனின் தியாக வரலாற்று உரை, எழுச்சிக்கானங்கள்  ஆகியன சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. 


இந்த எழுச்சி நிகழ்வுகளிற்கான ஒழுங்கமைப்புகளை பின்லாந்து மாவீரர் பணிமனை சிறப்பாக  ஏற்பாடு செய்திருந்தது. 


"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்."

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.