என் தோழர்களொடு அருகில் புதைத்துவிடுங்கள்...!!


ஒருவேளை நான் போர்களத்தில்
இறந்து போனால் என் உடலை
என் தோழர்களொடு அருகில் புதைத்துவிடுங்கள்...!!
என் தாயிடம் என்னால் முடிந்ததை
செய்தேன் என்று கூறுங்கள்..
என் தந்தையை தலைநிமிர்ந்து
நடக்க சொல்லுங்கள்..
கவலைப்படவேண்டாம் வானத்திலிருந்தே
என் தேசத்தை பார்ப்பேன்..
என் தம்பியை ஒழுங்காக படிக்க
சொல்லுங்கள்..
என் தங்கையை கவனமாக இருக்கச்
சொல்லுங்கள்..
அண்ணணை என் தம்பி என
பெருமைப்பட சொல்லுங்கள் ..
அக்காவை கவலைப்பட வேண்டாம்
என்று கூறுங்கள்..
என் நண்பனை கலங்க வேண்டாம்
என்று கூறுங்கள்..
ஏனென்றால் நான் ஒரு போர் வீரன்.....!!

நான் மரணிக்கவில்லை
உங்கள் மனங்களில் வாழும் மாவீரன்....!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.