மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை!
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஈரானிய மல்யுத்த வீரரின் வழக்கில் தொடர்புடைய நீதிபதி உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல ஈரானிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீதிபதி சையத் மஹ்மூத் சதாதி, நீதிபதி முகமது சொல்டானி, ஷிராஸின் புரட்சிகர நீதிமன்றத்தின் கிளை 1, மற்றும் அடெல் அபாத், ஒருமியே மற்றும் வாகிலாபாத் சிறைச்சாலைகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் வெனிசுலாவுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி எலியட் ஆப்ராம்ஸ், ஈரானிய மல்யுத்த வீரர் நவித் அஃப்காரிக்கு மரண தண்டனை விதித்த ஒரு நீதிபதியை இந்த பொருளாதாரத் தடைகள் குறிவைத்தன.
இதேவேளை ‘ஈரான் மக்களுக்கு சுதந்திரத்தையும் நீதியையும் மறுப்பவர்களை பொறுப்புக்கூற வைப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது’ என செனட் வெளியுறவுக் குழு தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்புப் படையினரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், இந்த மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர் தூக்கிலிடப்பட்டார் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடெல் அபாத் சிறைச்சாலையும் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு மல்யுத்த வீரர் ஈரானிய அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக பாம்பியோ கூறியதாகவும், இதேபோல அமெரிக்க குடிமகன் மைக்கேல் வைட் தடுத்து வைக்கப்பட்டிருந்த வக்கிலாபாத் சிறையும் இதில் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை