வடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி!
வடக்குக் கிழக்கில் உயர்தரத்தில் கல்விகற்று வேலை தேடும் இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக தொழில்வாய்ப்பு உத்திகளுக்கான விமானப் போக்குவரத்துக் கல்லூரி மையத்தினை அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துறையாடல் நேற்று (புதன்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், முதற்தடவையாக தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான இந்தக் கல்லூரியினை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து நிலையம் காணப்படுகின்றது. அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றிக்கான சேவை துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு அதனுடான தமிழ்மொழி தெரிந்தவர்களும் தொழில் வாய்ப்புக்காக இணைக்கப்படவுள்ளனர்.
இந்தக் கல்லூரிக்கான கட்டட நிர்மாணப் பணிகள் நவம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே, தமிழ் தெரிந்த மாணவர்களையும் உள்ளீர்க்க இந்த அரிய சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்து இருக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.
குறித்த கலந்துறையாடல், யாழ். சர்வதேச விமானப் போக்குவரத்தின் கடந்தகால நடவடிக்கைகளைக் கண்டறிதல், வடக்கு மாகாணத்தின் இலங்கை விமானப் போக்குவரத்துக் கல்லூரியினை எந்த இடத்தில் நிர்மாணிப்பது மற்றும் கல்லூரியில் கற்றல் பாடத்திட்டங்களுக்கான தொழில்வாய்ப்புக்களாக கல்லூரி கண்காணிப்பு தொழிலாளர்கள், இளங்கலை அபிவிருத்தி பாடத்திட்டம், நிர்வாக அலகுக்கான உத்தியோர்கத்தர்கள், விமான நிலைய தொழிலாளர்கள் போன்ற பாடக்கொள்கை சம்பந்தமாக இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்த உயர்மட்ட சந்திப்பில் வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் இலங்கை விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் உயரதிகாரிகள் மற்றும் தொழில்துறை சார்ந்த கல்லூரியின் விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை