இட்லி சாப்பிட மறுத்த குழந்தை; அடித்து கொன்ற பெரியம்மா!

 


கள்ளக்குறிச்சியில் இட்லி சாப்பிட மறுத்த குழந்தையை அதன் பெரியம்மாவே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஆரோக்கியமேரி. இவரது தங்கை ஜெயராணி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஜெயராணியின் பெண் குழந்தையை ஆரோக்கியமேரியே வளர்த்து வந்துள்ளார்

செவ்வாய்க்கிழமையன்று ஆரோக்கியமேரி குழந்தைக்கு இட்லி ஊட்டி விட்டு கொண்டிருந்துள்ளார். ஆனால் குழந்தை மற்ற பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாடும் ஆர்வத்தில் இட்லியை சாப்பிட மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி குழந்தையை அடித்து வீட்டிற்கு இழுத்து சென்று குச்சியால் அடித்துள்ளார்.

இதனால் குழந்தை மயக்கமான நிலையில் அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக  போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியமேரியை கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.