சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்தது அமெரிக்கா!

 


ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட சீன நாட்டினருக்கான விசாக்களை இரத்து செய்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து நுழைவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான மே-29 ஜனாதிபதி பிரகடனத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பு அபாயங்கள் எனக் கருதப்படுகின்றனர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயல் தலைவர் சாட் வுல்ஃப் கூறுகையில், ‘சில சீன பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சீனாவின் இராணுவ இணைவு மூலோபாயத்துடன் தொடர்புபட்டவர்கள்.

அவர்கள் தரவுகளை திருடுவதைத் தடுப்பதற்கும், மற்றபடி முக்கியமான ஆராய்ச்சிகளைப் பெறுவதற்கும் இந்த தடை உத்தரவு தேவைப்படுகின்றது’ என கூறினார்.

கொரோனா வைரஸ் ஆராய்ச்சியைத் திருடுவதற்கான முயற்சிகள் உட்பட, சீனாவின் அநியாய வணிக நடைமுறைகள் மற்றும் தொழில்துறை உளவு பற்றிய அமெரிக்க குற்றச்சாட்டுகளை வுல்ஃப் மீண்டும் மீண்டும் கூறினார்.

விசாக்களை இரத்து செய்ய திணைக்களத்திற்கு பரந்த அதிகாரம் உள்ளது. மேலும் விசா வைத்திருப்பவர் அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்படாமல் இருக்கலாம் அல்லது விசாவிற்கு தகுதியற்றவராக இருக்கலாம் என்பதைக் குறிக்கும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது அந்த அதிகாரம் பயன்படுத்தப்படுகின்றது.

யாருடைய விசாக்கள் இரத்து செய்யப்பட்டன என்பது குறித்த குறிப்பிட்ட விபரங்கள் பகிரங்கப் படுத்தபடவில்லை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.