நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு தீ வைப்பு !

 


நுவரெலியா- லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை, இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக லொறியின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் வசிக்கும் வீரசேகர பண்டார என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் லொறியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு  வாகனத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார். மேலும்,  தீயினால் குறித்த நபரின் லொறி முழுமையாக சேதமாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகள் லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.