உலக கிண்ண கால்பந்து போட்டி மீளவும் ஒத்திவைப்பு
ஜூனியர் பெண்களுக்கான உலக கிண்ண கால்பந்து போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
17 வயதுக்கு உட்பட்ட (ஜூனியர்) பெண்களுக்கான உலக கிண்ண கால்பந்து போட்டி இந்தியாவில் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடக்க இருந்தது.
கொரோனா பிரச்சினை காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 17ம் திகதி முதல் மார்ச் 7ம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால் வெளிநாடுகளில் நடக்க இருந்த இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் இந்த போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை