யேர்மனி வூப்பெற்றால் நகரில் உயிர்நீர்த்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவு நினைவுகூரப்பட்டது.

யேர்மனிவாழ் மக்களுடன் இளையவர்கள் இணைந்து திலீபனின் தியாக வேள்வியை யேர்மனிய நகரமத்திக்கு எடுத்து வந்தனர். அந்த வகையில் இன்று ஆறாவது நகரமாக வூப்பெற்றால் நகரம் தெரிவு செய்யப்பட்டு அந்நகரத்தின் மத்தியில் திலீபனுக்கு மாலை சூட்டி, மலர் தூவி, சுடர் ஏற்றினார்கள். இவர்களுடன் அந்நகரத்தின் நடைபாதைகளில் வந்த வேற்றின மக்களும் இணைந்து தியாக தீபத்திற்கு மலர் தூவினார்கள். யேர்மனிய மொழியினில் திலீபனின் தியாக வேள்ளி விபரமாக எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்ணுற்றவர்களுக்கு இளையவர்கள் விளக்கமளித்தார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை