முன்னாள் யாழ். மாநகர முதல்வரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

 


யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வரின் 22ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 

யாழ்ப்பாண மாநகரசபை முன்னாள் முதல்வர் பொன் சிவபாலனுடன் குண்டுவெடிப்பில் உயிரிழந்த யாழ்.மாநகரசபை உத்தியோகத்தர்கள் நால்வரின்  நினைவு தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

நாச்சிமார் கோவிலடியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று நினைவு கூரப்பட்டது.

சிவபாலனின் மனைவி திருமதி சிவபாலன் தவமலர், உறவினர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உப.தலைவர் அரவிந்த குமார், தங்க முகுந்தன் கட்சியின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடு நினைவு தினம் இடம்பெற்றது. சிவபாலனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டது.

1998ஆம் ஆண்டு இதேநாள் மேயர் பொன்.சிவபாலன், பிரிகேடியர் சுசந்த மென்டிஸ், இராணுவ கெப்டன் ஆர்.எம்.கே. ராமநாயக்கா, யாழ்.பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், சிரேஷ்ட பொலிஸ் சுப்பிரின்டன் சந்திரா பெரேரா, ஏ.எஸ்.பி.சரத் பெர்னான்டோ, ஏ.எஸ்.பி.சந்திரமோகன், மாநகர சபையின் பதில் ஆணையாளரும் நிர்வாக உத்தியோகத்தருமான சு.பத்மநாதன், வேலைப்பகுதியின் பொறியலாளர் மா.ஈஸ்வரன், வரைபடக் கலைஞர் மல்லிகா ராஜரடணம், சுருக்கெழுத்தாளரும் தட்டெழுத்தாளருமான பொ.பத்மராஜா உட்பட 18 பேர் யாழ்ப்பாண மாநகரசபை இந்து விடுதியில் யாழ்.மாநகரத்தின் போக்குவரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்ந்த கூட்டத்தின்போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.