இணையவழி பகிடிவதை - யாழ். பல்கலைக்கழகத்தில் 4 மாணவர்கள் கற்றலிலிருந்து நிறுத்தம்!!

 


யாழ்.பல்கலைகழகத்தில் கனிஷ்ட மாணவர்கள் மீது இணையவழி பாலியல் பகிடிவதை புரிந்து குற்றச்சாட்டில்  4 மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இரு கனிஷ்ட மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 


மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி நிமலதாஸன் கூறியிருக்கின்றார்.  சமூக வலைத்தளங்கள் ஊடாக பாலியல் பகிடிவதை இடம்பெற்றதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பாக  இன்று யாழ்.பல்கலைகழகத்தில் ஊடகங்களை சந்தித்து பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 


இதன்போது மேலும் அவர் கூறுகையில்,  அண்மையில் நடைபெற்ற பகிடிவதை தொடர்பில் உத்தியோகப்பற்ற முறையில் வெளியாகிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம்  10 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு   அவர்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 


அதேவேளை குறித்த பகிடி வதை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவரும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இனங்காணப்பட்ட மாணவர்கள் குறித்த விபரங்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்காலத்தில் பகிடிவதையில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள தண்டனைகள் தொடர்பிலும் விளக்கமளித்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பகிடிவதைகளை கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தினதும் ஒத்துழைப்பினையும் கோரியுள்ளனர்.


நடந்தது இயைணவழி பாலியல் இம்சையே - பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா 

யாழ்.பல்கலைகழகத்தில் இணையவழி பகிடிவதை நடக்கவில்லை. இணையவழி பாலியல் இம்சை நடந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா, பல்வேறு பரிமாணங்களில் இந்த இம்சை நடப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். 


யாழ்.பல்கலைகழக முகாமத்துவ பீடத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் பகிடிவதைகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 


இதன்போது மேலும் அவர் கூறுகையில், புகுமுக மாணவர்கள் மீது இவ்வாறான இம்சைகள் புரியப்படுகின்றது.  இவை பல்வேறு பரிமாணங்களில் நடைபெறுகின்றன.கோவிட்- 19 இடர் நிலைமைகளினால் கற்றல்கள் இணையவழியில் இடம்பெற ஆரம்பித்திருந்தோம். 


இம்சையாளர்களும் இணையத்தில் தமது இம்சைகளை மேற்கொள்கின்றன. ஊடகங்களும், பொது மக்கமும் ஒன்றினைந்து பகிடிவதையை வேறறுக்க முடியும். 


இரண்டு நாட்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு குற்றப் பத்திரத்தை தயாரித்து ஏழு நாட்களுக்குள் இம்சைச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் பதில் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்கப்படும். 


மாணவர்கள் ஓழுக்காற்று சபை ஒன்றினையும் உருவாக்கியுள்ளதாகவும் இம்சைப்படுத்தல் தொடர்பில்  உரிய கவனம் செலுத்தப்படும் எனவும், தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.