லெபனான் பாதுகாப்பு படையின் இரு உறுப்பினர்கள் உயிரிழப்பு!!

 


லெபனான் பாதுகாப்புப் படையினர் இருவர் நேற்று சனிக்கிழமை நாட்டின் வடகு பகுதியில் போராளிகளுடன் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.

அராமனின் வடமேற்கு பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு போராளி கொல்லப்பட்டார் என்றும் பலர் தப்பி ஓடினர் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிரிய எல்லைக்கு அருகிலுள்ள வடகிழக்கு லெபனானில் மற்றுமொரு ஆயுதக்குழுவுடன் இடம்பெற்ற மோதலில் லெபனான் பாதுகாப்புப் படையினர் குறைந்தது ஆறு போராளிகளைக் கொன்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த மோதலில் லெபனான் பாதுகாப்புப் படையினர் மூன்று பேர் காயமடைந்தனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.