பீகார் மாநில முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்!
100 நாள் வேலைத் திட்டத்தை செயற்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் (வயது-74) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமாகியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததுடன் அவருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ரகுவன்ஷ் பிரசாத் சிங் இன்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், கிராமப்புற வளர்ச்சிக்காக பல திட்டங்களை முன்னின்று கொண்டு வந்தவர். அதில் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் முக்கிய திட்டமான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தைக் குறிப்பிடலாம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை