வீதி பூட்டு - பாடசாலையில் குழப்பம்!!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பாடசாலைக்கு பிள்ளைகளை கொண்டு செல்லும் பெற்றோர்கள், மாணவர்களை இறக்கிய பின்னர் மாற்று வழி மூலம் பாடசாலையிலிருந்து வெளியே செல்கிறார்கள்
மாற்று வழியானது பாடசாலையின் மறுபுறம் உள்ள அரச விடுதிகளின் அருகாமையில் உள்ளது.
இதனூடாக வாகனங்கள் பயணிப்பதால் தமக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவித்து அங்கு வசிக்கும் ஒருவர், வீதியின் பாதையை மூடி போக்குவரத்தை தடை செய்துள்ளார்.
இதனால் பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அசெளகரியத்திற்கு ஆளாகியதுடன், குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பெற்றோர்கள், வீதியினை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் குழப்பமான சூழல் காணப்பட்டிருந்தது.
பின்னர் பெற்றோர்களது வேண்டுகோளிற்கிணங்க வீதி திறக்கப்பட்டது. பின்னர் நிலமை சுமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை