20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சம்பந்தனும் மனு!
அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார்.
ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் பாராளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை இது தொடர்பில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி மேலும் கொள்கை மாற்றங்களுக்கான மையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகந்த கொடித்துவக்கு, அனில் காரியவசம் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை