நீண்ட தாடியோடு சந்தானம்!
நீண்ட தாடியுடன் சந்தானம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்ப் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்த சந்தானம் கதாநாயகனாக மாறினார். அவரை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் நல்ல வசூலை தந்தன. இதையடுத்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார். அதற்கேற்ப கடும் உடற்யற்சிகள் செய்து தோற்றத்தையும் மாற்றி இருக்கிறார்.
தற்போது பிஸ்கோத், டிக்கிலோனா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிஸ்கோத் படம் முடிந்து தியேட்டர்கள் திறக்க தாமதம் ஆவதால் ஓ.டி.டி தளத்தில் வெளியிட ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தானம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
அதில் நீண்ட தாடியுடன் கூலிங் கிளாஸ் அணிந்து மொத்தமாக ஆளே மாறிப்போய் இருக்கிறார். இது ஜான்சன் இயக்கத்தில் நடிக்க உள்ள அவரது அடுத்த படத்துக்கான ‘கெட்டப்’ என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் வைரலாகி இணைய தளத்தை கலக்கி வருகிறது
-ராஜ்
கருத்துகள் இல்லை