சந்தர்ப்பத்தை வக்கணையா பயன்படுத்திய திமுகவும் - முரட்டுத்தனத்தினாலும் முட்டாள்தனத்தினாலும் தவறவிட்ட சீமானும்
விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசிய கூறுகளை பேசும் என்று நம்பும் கட்சியாக நாம் தமிழர் கட்சி அறியப்படுகிறது. அதற்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த காத்திருந்தது திமுக. இந்த திட்டத்தை நாம் தமிழர் ஆரம்பித்த நாள் முதல் திமுக செய்து வந்திருக்கிறது. அதன்பொருட்டு பல ஊடுருவல்கள் கட்சிக்குள் வந்தடைந்தார்கள். அவ்வளவு ஏன் நாம் தமிழர் அமெரிக்கா குழுவை உருவாக்கிய முக்கிய பங்காளிகளே திராவிட நபர்கள் தான். அட உருவாக்கினதே அவனுக தான். அப்படியிருக்க,
கருத்தியல் ரீதியாக உடைக்க முடியாத ஒரு வலுவான இயக்கத்தில் கூட பணம் நுழைந்தால் எளிதில் உடைத்துவிட முடியும் என்கிற நிலையில் பல முரண்களை உள்ளடக்கிய நாம் தமிழர் கட்சியை பணத்தை காட்டி பதம்பார்த்த சூழலும் வந்துவிட்டது. 2018 க்கு முன்பு வரை அமெரிக்காவில் இருந்து வசூலிக்கப்படும் பணம் பாக்கியராசன் கணக்கு போய் பிறகு எங்கு போகும் என்பது தெரியாவாறு இருந்தது. பணம் அனுப்பியவர்கள் பலர் விவரம் கேட்டும், தொகுதியில் விசாரித்து பணம் வரவில்லை என்று தெரியவந்து ஒரு அதிருப்தியில் இருந்தனர். இதனை எல்லாம் கவனித்து கொண்டிருந்த திமுக அதன் பிறகு கொண்டுவந்த திட்டங்கள் தான் அபாயகரமானவை.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒட்டி தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை "NGO வசூலிஸ்டுகள்" குறிவைத்தார்கள். இந்த இந்திய NGO வசூலிஸ்டுகளோடு ஒரு எழுதப்படாத உடன்படிக்கைக்கு வருகிறார்கள் திமுக காரர்கள். இரண்டு பெரும் சேர்ந்து பணத்தை வைத்து தமிழ் தேசியம் என்கிற கருத்தியலை உடைக்க சீமான் கட்சியை கட்டம் கட்டுகின்றனர்.அதற்கு அவர்கள் செயல்திட்டம் படி முதலில் புதிய திமுக-NGO வசூலிஸ்டுகளை தனது பழைய நாம் தமிழர் ஸ்லீப்பர் செல்ஸ் மூலம் ஊடுருவ ஏற்பாடு செய்யப்பட்டது. அதையும் செய்தார்கள். அதற்கு அவர்கள் காட்டிய சாதனை தான் பிரமாண்ட வசூல். கட்சி நிர்வாகிகளுக்கு வசூலும், கட்சி உறுப்பினர்களுக்கும் நாம் வசூல் செய்யும் பணம் நேரடியாக தேர்தல் தொகுதிக்கு கொடுக்கப்படும் என்கிற பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கட்சிக்குள் இருந்த நேர்மையான தமிழ் தேசியவாதிகள் இந்த புது பிறமொழியாள திமுக-NGO வசூலிஸ்டுகளை குறித்த கேள்வி எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். பாக்யராசனுடன் பேசிய ஒரு தொடர் அழைப்பில் இந்த புது குழுவே சீமான் தான் வெளியிட்டார் அதனால் அவருக்கு எதிராக பேசுற அனைவரும் துரோகிகள் என்று பட்டம் சூட்டப்பட்டு கேள்வி கேட்டவர்கள் அனைவரும் பாக்கியாவின் உறவினர் மற்றும் கட்சியின் பொது செயலாளர் தடா சந்திரசேகர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
புதிய திமுக-NGO வசூலிஸ்டுகள், பொதுமக்கள் இல்லாமல் தனது திராவிட வட்டத்தில் வசூலை போட்டு திரட்டியது கிட்டத்தட்ட 20 லட்சம். அடுத்து அவர்களின் திட்டம் தான் நாம் கவனிக்க வேண்டியது. அவர்கள் தேர்ந்தெடுத்தது கல்யாணசுந்தரம் மற்றும் காளியம்மாள். கல்யாணசுந்தரம் தேர்தல் செலவிற்கு ஒரு பெருந் தொகையும் காளியம்மாள் தேர்தல் செலவிற்கு மீதி தொகையும் நேரடியாக அளிக்கப்பட்டது. சீமானை பார்க்கலாம் என்று கட்சி அலுவலகம் சென்றாலே நிதி கொண்டு வந்தீங்களா என்று சட்டை பையை எட்டி பார்க்கும் இடத்தில். 20 லட்சம் சீமான் வளர்ச்சி நிதிக்கு செல்லவில்லை என்றால் அது பிரச்சனையாகும் என்று தெரிந்தே தான் திமுக விளையாடியிருக்கிறது. இந்த சதியை உணர்ந்து சில தமிழ் தேசியவாதிகள் கல்யாணசுந்தரத்தை எச்சரித்தோம். துரதிஷ்டவசமாக கல்யாணசுந்தரம் எச்சரிக்கை செய்தவர்க்ளை பாக்கியாவின் ஆள்களாக பார்த்துவிட்டார். அந்த அளவிற்கு திமுக-NGO வசூலிஸ்டுகளை ஒரு தொடர்பை கல்யாணசுந்தரத்திடம் ஏற்படுத்தியிருந்தார்கள்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது. பணத்தின் மீது கவனம் மாறும் பொழுது அதற்கான ஊடுருவல்களை தெரிந்தே அனுமதிக்கும் பொழுது, அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர் கொள்ளும் நிலையில் கட்சியின் கட்டமைப்போ அல்லது தலைவரோ வலுவாக இல்லாத பட்சத்தில் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் உணர வேண்டும். அதனை தொடர்ந்து திமுக i-PAC ஆல் குறிவைக்கப்படுகிறார் கல்யாணசுந்தரம். தேர்தல் நெருங்கும் பொழுது பல திட்டங்களை விகடன் குழுமம் தொடர்ந்து தீட்டும். அந்த வகையில் இந்த தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி. ஒரு போலி கடிதம் அந்த வேலையை செய்தது. அதன் பிறகு கொளத்தூர் மணியுடனான பேட்டி, சவுக்கு சங்கர், கார்த்திகேய சிவசேனாதிபதி போன்ற பல தமிழர் அரசியல் விரோதிகளும் சேர்ந்தே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு திமுக வின் திட்டத்திற்கும் தமிழ் தேசிய அரசியல் மீது நாம் தமிழர் கட்சி மீது ஒரு தாக்குதலை தொடுத்தனர். இதனை எதையும் உள்வாங்கக்காமல், சீமானின் பேட்டி எதிரிக்கே வலுசேர்த்தது.
சீமான் அந்த பேட்டியில், தனது கட்சி காரன் வளர்வது தனக்கு புடிக்கவில்லை அதனால் தான் வன்மம் என்பதை காட்டிவிட்டார். ஏற்கனவே பல பேட்டிகளில் நான் கட்சிக்காரனை வளர்ப்பேன் அவன் வேறு கட்சிக்கு தவுவான் என்று தன்னை விட ஒருவன் புகழ் பெற்றுவிட கூடாது என்று கருதுவதை எல்லாம் திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது.
இதை எழுதுவதால், நான் ஒன்றும் கல்யாணசுந்தரம் ஆள் கிடையாது. அவரின் பல அரசியல் நிலைபாடு மீது உடன்பாடு கிடையாது. ஆனால் சீமான் பேசிய விதம், தலைவர் மீது சத்தியம் செய்து புலிகளுக்கு செய்த அவமதிப்பு, என்னை கொலை செய்ய காத்திருந்தார்கள் போன்றவற்றில் எல்லாம் அக்மார்க் கருணாநிதி தனம் தான் தெரிந்தது. வைகோவை வெளியேற்ற புலிகள் மூலம் கொலை செய்ய திட்டம் தீட்டினர் என்று கருணா சொன்னதிற்கும் இதற்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. திமுகவின் திட்டத்திற்கு வீழ்ந்தாது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் உள்நுழைந்து வீழ்த்தும் அளவிற்கு சமரச போக்குடனும், தகுதியே இல்லாத நபர்களை மட்டுமே ஆட்டு மந்தை போல கூட்டி பொறுப்பு கொடுத்து வசூல் மட்டுமே முக்கியம் மற்றது எல்லாம் அப்புறம் என்று ஒரு கட்டுப்பாடற்ற கட்சியாக இருந்தது தான என்று யோசித்து பார்க்க வேண்டும்.
மேற்கூறிய அரசியலை உள்வாங்கி சிந்தித்தால் நல்லது. அல்லது கண்டபடி திட்டுவதும், கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவா ? அவர் செந்திலுக்கு பேட்டி கொடுத்தார், வெளியில் ஏன் பேசினார் ? என்றெல்லாம் கேனத்தனமான கேட்டால் ஒன்று செய்ய முடியாது. என்ன வளர்ப்பு அப்படின்னு ஒதுங்கி போயிட வேண்டியது தான்
கருத்துகள் இல்லை