20வது அரசியலமைப்பு : ஆய்வுக்கு குழு

 


முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்ன தலைமையில் குறித்த குழுவில் உறுப்பினர்களாக 13 ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிர்வாக குழு மற்றும் சட்ட சபையினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் குறித்த குழுவில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Powered by Blogger.