திலீபன் வேண்டி நின்ற மக்கள் புரட்சி இன்றே வெடிக்கட்டும்!


உலகின் ஜனநாயக விழுமியங்களை மதித்து தனது மக்களின் அடிப்படை அரசியல் மற்றும் ஜனநயக உரிமைகளை முன்வைத்து நீர் ஆகாரமின்றி உண்ணா நோன்பிருந்து தனது மக்களுக்காக மரணித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தீயாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இனவாத சிங்கள அரசு தடை விதித்துள்ளது.

விடுதலைக்காகப் போராடும் மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டும் என்றால், அவர்களின் மனங்களில் இருந்து அவர்களுக்காகப் பேராடியத் தலைவர்களின் நினைவுகளை அழித்துவிடுவதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரிடம் கடத்தப்படும் விடுதலை உணர்வகளை அழித்துவிடலாம் என எண்ணுகின்றது சிறீலங்கா அரசு. எனவேதான, தனது நீதி அதிகாரம், படைபலம் கொண்டு தமிழ் மக்கள் மீது இந்த வன்முறைகளை சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ஆனால் சிறீலங்கா அரசின் இந்த அடக்குழுறைகளுக்கு நாம் அஞ்சிவிடாது அதனை உடைக்கும் வழிகளைத் தேடவேண்டும். எமது மக்களின் விடுதலை உணர்வைத் தக்கவைப்பதன் மூலம், இனத்தின் விடுதலைக்கானப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.

எனவே சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும். தமிழ் பல்கலைக்கழக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்கள் என்பன இதற்கானப் பங்களிப்புக்களை உடனடியாக வழங்க வேண்டும்.

கிராமம் கிராமமாக மக்கள் தீயாக தீபத்துக்கான நினைவேந்தல் நிகழ்வைத் தொடர் உண்ணாவிரத போராட்டமாக ஆரம்பித்து நடத்த வேண்டும். ஒவ்வொருக் கிராமத்திலும், ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு பாடசாலைகளிலும், ஒவ்வொரு சனசமூகநிலையங்களிலும், ஒவ்வொரு ஆலயங்களிலும் அதற்கான ஏற்பாடுகளை மக்களாக முன்வந்து மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்குரிய உதவிகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களும், மாணவர் அமைப்புக்களும், பொது அமைப்புக்களும், புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ் புத்திஜீவிகளும், தேசியச் செயற்பாட்டாளர்களும் வழங்க வேண்டும்.

தாயகத்து தமிழ் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு  தமிழக மக்களும் தமது ஆதரவுகளை வழங்கி, சிறீலங்கா அரசின் வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும்.

தீயாக தீபத்தின் பல இலட்சம் பதாதைகளை அச்சிடுவோம் அதனை மக்களிடம் வழங்கி, நினைவு எழுச்சியை மக்களிடம் இருந்து ஆரம்பிப்போம். சிங்கள அரசின் படைகள் எத்தனை மக்களை சிறையில் அடைக்க முடியும் என்பதை நாமும் பார்த்துவிடுவோம்.

ஜனநாயக வழிகளில் நடக்கும் மக்கள் மீது, சிங்கள அரசு அடக்கு முறைகளை மேற்கொண்டால் அதனை அனைத்துலகத்தினதும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களினதும் கவனத்திற்கு கொண்டுவரும் பணிகளைத் தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளும், புலம்பெயர் அமைப்புக்களும் முன்னின்று செய்ய வேண்டும்.

இலக்கு ஆசிரியர் 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.