கேள்விக்குறியாகும் ஒலிம்பிக்

 


உலகம் முழுதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக, டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ‘கொவிட் 19 இருந்தாலும் இல்லாவிட்டாலும்’ கூறிய தினத்தில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் என ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இந்தாண்டு துவங்கவிருந்த திகதிக்கு ஒருநாள் முன்னதாக 2021ம் ஆண்டு ஜூலை 23 இல் ஒலிம்பிக் போட்டிகளை துவங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ள நிலையில், குறித்த திகதியில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்த ஒலிம்பிக் டோக்கியோ 2020 என்றே அழைக்கப்படும். மேலும் வரும் ஜூலை 23, 2021இல் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நடத்தவும், ஆகஸ்ட் 8, 2021 இல் நிறைவு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 124 ஆண்டு கால மாடர்ன் ஒலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 1940 இல் இதேபோல டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.