மேலும் ஒரு பிரபலம் 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் இணைவு!!

 


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள ’பிக்பாஸ் நான்காவது சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் அதிருப்தியில் இருக்கும் ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 4 சீசனின் புரோமோ வீடியோ மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரியோ ராஜ், பாலாஜி முருகதாசன், மற்றும் நடிகைகள் சனம் செட்டி, அமிர்தா ஐயர் ஆகிய நால்வர் பங்கேற்க உள்ளது கிட்டத்தட்ட உறுதி என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.


இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான் ’கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று அதன்பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான ரக்‌ஷன்.


ரக்‌ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அப்போது ரசிகர்கள் ’இப்போது விஜய் டிவியில் உங்களை பார்க்க முடியவில்லையே என்று கேட்டதற்கு ’விரைவில் ஒரு ஸ்பெஷலாக வரவுள்ளேன்’ என்று பதிலளித்துள்ளார். அந்த ஸ்பெஷல் பிக்பாஸ் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.


இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நாளில் போட்டியாளர்கள் அறிமுகம் ஆகும் வரை அனைத்தும் யூகமே என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.