குளங்கள் – வயல்களில் மணல் அகழ மட்டு அரச அதிபர் தடை விதித்தார்!

 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.

கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

வயல் நிலங்களை திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும். இதன் காரணமாக வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Blogger இயக்குவது.