ஊரடங்கு காலத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன – ஸ்மிருதி இரானி!!

 


பொதுமுடக்க காலப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநிலங்களவையில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஆரோக்கியம், மருத்துவ நலம்,  குழந்தைகளின் ஊட்டசத்து, தாய், சேய் இறப்பு விகிதம்,  குழந்தை பாலியல் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை இதுவரை அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.

கடந்த மார்ச் முதல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி மார்ச் முதலாம் திகதி முதல் கடந்த 18ம் திகதிவரை தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் குழந்தைகளுக்கு எதிராக இடம்பெற்ற வன்கொடுமைகள் தொடர்பாக 13 ஆயிரத்து 244 முறைப்பாடுகளும் குழந்தைகள் உதவி இந்திய அறக்கட்டளைபடி 3 ஆயிரத்து 941 வன்கொடுமை முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இந்த குற்றங்கள் மீதான விசாரணைகளை விரைந்து முடிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் இந்த ஊரடங்கு காலங்களில் பெண்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான குடும்ப வன்முறை முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.