இளம் குடும்பஸ்தர் மரணம் - உறவினரின் கோரிக்கையால் சர்ச்சை!!

 


நெல்லியடியில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் உயிருடன்தான் உள்ளார் என்று ஊர் மக்கள் முரண்பட்டமையால் பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் பொலிஸாரின் தலையீட்டால்  சுமுகநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நெல்லியடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் பொருள்கள் சுமக்கும் தொழிலாளியான இராஜ கிராமத்தைச் சேர்ந்த நாகராசா நரேஸ் (வயது -26) என்பவரே உயிரிழந்தவராவார்.

குடும்பத்தலைவர் நேற்று மாலை தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்து சரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக  அம்புலன்ஸ் வண்டியில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அருகில் இருந்தவர்கள் சேர்த்தனர்.

இதன்போது, குடும்பத்தலைவர் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அனுமதிப்பிரிவு மருத்துவர் அறிக்கையிட்டார். அதனால் உயிரிழந்தவரின் சடலம்  பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்கள், சடத்தைப் பார்வையிட்டு அவர் உயிருடன்தான் உள்ளார் என்று தெரிவித்து சடலத்தை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளிக்குமாறு கோரினர்.

அதனால் மருத்துவர்கள் பரிசோதனையை செய்தனர். எனினும் குடும்பத்தலைவர் உயிரிழந்தமையை மருத்துவர்கள் மீளவும் உறுதி செய்தனர்.

அதனால் உறவினர்கள் மருத்துவ சேவையாளர்களுடன் முரண்பட்டதால் வைத்தியசாலையில் குழப்பநிலை காணப்பட்டது. எனினும் பொலிஸாரின் வருகையை அடுத்து சுமுகநிலை ஏற்பட்டது என்று மந்திகை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர், மருத்துவர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.