மன்னாரில் இந்து எழுச்சி மாநாடு நடைபெற்றது!!

 


மன்னார் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழுச்சி மாநாடும், இந்து குருமார் பேரவையின் 25ஆவது ஆண்டு விழாவும் இன்று நடைபெற்றது.

மன்னார் இந்து குருமார் பேரவையின் தலைவர் மனோ ஐங்கர சர்மா தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இந்நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக காலை 9.45 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மன்னார் நகர மண்டபவம் வரை அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்றது.

குறித்த ஊர்வலத்தில் இந்து குருமார்கள், இந்து மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்ததுடன் இதன்போது நந்திக் கொடியை ஏந்தியவாறு மன்னார் நகர மண்டபம் வரை ஊர்வலமாக வந்தனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்தில் அமைக்கப்பட்ட கலாநிதி மனோகரக் குருக்கள் அரங்கில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது நடனம் மற்றும் உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணாநந்த குருக்கள், கொழும்பு சிறி பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு குமன் குருக்கள், சிவசேன அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் உட்பட இந்து மத குருக்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.