மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் நிறுவனங்களையும் சீன நிறுவனம் உளவு பார்ப்பதாக தகவல்!!

 


பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் நிறுவனங்களையும் சீன நிறுவனமொன்று உளவு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shenzen  நகரில் உள்ள Zhenhua Data Information Technology  என்ற நிறுவனம் இந்த வேலையை செய்வதாகக் கூறப்படுகிறது. சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இந்த நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், சோனியா காந்தி, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சரவை அமைச்சர்கள், முப்படை தலைமை தளபதி, முன்னாள் தளபதிகள், தலைமை நீதிபதி போப்டே, டாடா உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோரையும் இந்த நிறுவனம் உளவு பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Zhenhua நிறுவனத்திற்கு உலகம் முழுதும் 20 பிராசசிங் மையங்கள் உள்ளன. சீன அரசு மற்றும் இராணுவத்தை தனது வாடிக்கையாளர்களாக இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.