கடல் தொழிலாளி மீது கடற்படையினர் தாக்குதல்.

 முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது  பேரினவாத கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்  

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியிலிருந்து நேற்று (28)இரவு கடல் தொழிலுக்குச் சென்ற கதை தொழிலாளி மீது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளி  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

முல்லைத்தீவு கடலில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த பகுதியில்  சிங்கள  கடற்படையினர் கடற்தொழிலாளர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர் தொழிலாளி காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் கள்ளப்பாடு பகுதியினைச் சேர்ந்த 46 தொழிலாளியை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.