வவுனியாவில் அரச காணியை அத்துமீறி அபகரித்து விற்பனை செய்யும் நபர்!

 


வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலுள்ள அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வீதியோரக்காணியை அபகரித்து பொதுமக்களிடம் பணம் பெற்று விற்பனை செய்து வரும் நபர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கியுள்ளனர் .


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ”வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலைய வீதியோரத்தில் காணப்படும் வீதி அபிவிருத்தித்திணைக்களம் , புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான 182 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் வரையான வீதியோரக்காணிகளை மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும்  தனி நபர் ஒருவர் அத்து மீறி அபகரித்து வருவதுடன் அக்காணிகளை பொதுமக்களுக்கு பணம் வாங்கி விற்பனை செய்து வருகின்றார் .


எனவே இவ்வாறு செயற்பட்டு வரும் நபர் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோதும் குறித்த நபரைக் கைது செய்து அவர் மீது எவ்விதமான நடவடிக்கையும் பொலிசார் மேற்கொள்ளவில்லை . எனவே அரச காணியை அபகரித்து விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வரும் குறித்த நபரைக் கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த நபர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கொக்குவெளி பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகள் சிலவற்றை அபகரித்து பிற பகுதிகளில் வசித்துவருபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்


இவ்விடயம் குறித்து பொலிசார் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்போதிலும் தற்போது தாண்டிக்குளம் பகுதியில் அரச காணியை அபகரித்து விற்பனை செய்து வருகின்றதை தடுத்து நிறுத்துமாறு மேலும் கோரிவருகின்றனர் .


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.