முல்லைத்தீவில் காவலரண் அமைக்க நீதிமன்றம் அனுமதி!!
முல்லைத்தீவில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான குருந்தூர்மலையில், காவலரண் ஒன்றினை அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் இன முறுகலை ஏற்படுத்துகின்ற வகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குருந்தூர் மலைப் பகுதியில் கட்டுமான வேலை ஒன்றினை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனடிப்படையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற விசாரணை நடவடிக்கைகளில் காவலரண் அமைப்பதற்கான கட்டுமானங்களையே தாம் மேற்கொள்ளவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித்த காவலரண் அமைப்பதற்காக மாவட்டசெயலகம், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் என்பன தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கிய அனுமதிப் பத்திரங்களை அவர்கள் மன்றிற்கு சமர்ப்பித்தனர்.
இதன்போது ஏற்கனவே முல்லைத்தீவு – குருந்தூர் மலைதொடர்பாக இடம்பெற்ற வழக்கில், வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையின் மூலம் குருந்தூர் மலைப் பகுதியில் கட்டடங்கள் எவையும் இரு தரப்பினராலும் அமைக்க முடியாதென உத்தரவிடப்பட்டது.
எனவே அதன் அடிப்படையில் இரு தரப்பினரும் இணங்கிச் செயற்பட வேண்டும் என நீதிமன்று வலியுறுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை