செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு கிடைத்த பெரும் அதிர்ச்சி!!!
மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு பார்சலை திறந்த திறந்தபோது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் ஒன்றினை ஆர்டர் செய்துள்ளார்.
அதாவது 12000 மதிப்புள்ள செல்போன் 2999ரூபாய்க்கு தருவதாக பதிவிடப்பட்டிருந்ததால், மகளுக்கு தேவைப்படுவதால் ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து 6 நாள்களுக்குப் பிறகு ஆர்டர் செய்த பார்சல் வீட்டிற்கு வந்த நிலையில், பணத்தைக் கொடுத்து விட்டு பார்சலை பிரித்து பார்க்குமாறு டெலிவரி பாய் கூறியுள்ளார்.
ஆனால் பிரித்துப் பார்த்து விட்டு தான் பணத்தைத் தருவேன் என கூறிய முகமது அலி, பார்சலை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அந்த பார்சலில் செல்போனிற்கு பதிலாக 2 சீட்டுக்கட்டு இருந்துள்ளது. அந்த நேரம் பார்த்து டெலிவரி பாயோ, பார்சலுக்கும் டெலிவரிக்கும் சம்பந்தமில்லை எனக்கூறி அங்கிருந்து நழுவ முயன்றுள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் டெலிவரி பாயை மடக்கி பிடித்த முகமது அலி, அவரை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பொலிசார் டெலிவரி பாயிடம் விசாரணை நடத்தியதில், தங்களுக்கு வந்த பார்சலை டெலிவரி செய்வது மட்டுமே எங்கள் வேலை’ என்று தெரிவித்துள்ளார்.
பிறகு, டெலிவரி பாய் வேலை பார்த்த நிறுவனத்தின் விலாசம், போன் எண், செல்போன் எண்களை வாங்கி விட்டு பொலிசார் அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே ஆன்லைனில் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிசார் கூறியுள்ளதோடு, இம்மாதிரியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை