ஒரு தொகை அடையாள அட்டைகளுடன் பணப்பைகள் ஹட்டன் வீதியில்!!
ஹட்டன் நகரப்பகுதியில் ஒரு தொகை அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகளும் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரசபை ஊழியர்கள் இன்று காலை வடிகாண் துப்பரவு வேலையில் ஈடுபட்ட போதே மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் நகரின் பிரதான வீதியில் நீர் வடிகாணில் மலக்கழிவுகள் கால்வாய் இணைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து நகர சபையால் நகரின் பிராதன வீதீயில் நீர்வடிகாண் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே 06 அடையாள அட்டைகள், 05 பணப்பைகள்,02 ஏ.டி.எம்.காட் என்பன ஊழியர்களினால் மீட்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பணப்பபையில் பணம் எதுவம் இருக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் தீபாவளி காலங்களில் நகருக்கு வரும் பொது மக்களிடமிருந்து திருடர்களினால் களவாடப்பட்டவையாக இருக்காலம் என சந்தேகிப்பதுடன் இதற்கு முன்னரும் இவ்வாறு அடையாள அட்டைகள் மீட்கப்பட்டு அவை சம்பந்தப்படவர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மீட்ப்பட்ட அடையாள அட்டையின் உரிமையாளர்களை வரவழைத்து விசாரணையின் பின்னர் ஒப்டைக்க நடவடிக்கை எடுப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை