இஸ்ரோ பெங்களூரில் செயற்கை நிலவு பள்ளங்களை உருவாக்கவுள்ளது!!


 பெங்களூரில் செயற்கை நிலவு பள்ளங்களை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவியை பரிசோதிக்கும் வகையில் இவ்வாறு உருவாக்கம் இடம்பெறவுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அடுத்த ஆண்டு (2021) சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது. இதற்கான பணிகள் நடந்துவருவதுடன் விண்ணில் ஏவுவதற்கு முன்பாக விண்கலத்தில் உள்ள லேண்டர் கருவியை சோதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து 215 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சித்திரதூர்கா மாவட்டம் சல்லகேர் தாலுகாவில் உள்ள உல்லார்தி காவலுவில் 24.2 இலட்சம் ரூபாய் மதிப்பில் 10 மீற்றர் விட்டம், மூன்று மீற்றர் ஆழத்தில் செயற்கை நிலவுப் பள்ளங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, இம்மாத இறுதியில் பணிகள் நிறைவுபெறவுள்ளன.

சந்திரயான்-3 லேண்டருக்கான சோதனைகளில் நிலவில் உள்ள பள்ளங்கள் முக்கியபங்கு வகிக்கின்றன. செயற்கைப் பள்ளங்களுடன், சந்திரயான்-3 தரை இறங்குவதற்கான நிலவின் மேற்பரப்பின் மாதிரியை இஸ்ரோ உருவகப்படுத்தும்.

இதில், லேண்டரின் சென்சார்கள் செயற்றிறன் குறித்து முக்கியமாக சோதனை செய்யப்படும் என்பதுடன் செயற்கை நிலவுத் தளத்தில் இஸ்ரோவின் சிறிய விமானம் 7 கிலோ மீற்றர் உயரத்தில் இருந்து சென்சார்களுடன் தரை இறங்கும்.

விமானம் தரையிறங்கும் மேற்பரப்பில் இருந்து இரண்டு கிலோமீற்றர் உயரத்தில் இருக்கும்போது, சென்சார்கள் மெதுவான தரையிறங்க வழிவகுக்கும். இதன்மூலம் லேண்டரை வழி நடத்துவதில் அது எவ்வளவு திறமை வாய்ந்தது என்பது கண்டறியப்படும்.

இதன்படி, பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை நிறுவுதல் நிலையத்தில் லேண்டரை முழு அளவில் சோதிப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colom

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.