நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீடிப்பு!!

 


போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் ஒக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான தனி வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சவ்கிக் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ரியாவிற்கு முதலில் விதிக்கப்பட்டிருந்த 14 நாட்கள் நீதிமன்றக் காவல் செவ்வாயன்று முடிவடைந்தது.

இதையடுத்து விடியோ கான்பெரன்சிங் மூலமாக மும்பையில் உள்ள போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரியாவின் நீதிமன்றக் காவலை ஒக்டோபர் 6 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும், அந்த மனு மீது 23 ஆம் திகதி விசாரணை நடைபெறும் என்றும், அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.