அமெரிக்கா மிகப்பெரிய அளவில் தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளது!

 


சீனாவுக்கும் தாய்வானுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், தாய்வானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணைகள் உட்பட ஏழு பெரிய பொதி ஆயுதங்களை தாய்வானுக்கு விற்க ட்ரம்ப் நிர்வாகம் முயன்று வருவதாக கூறப்படுகின்றது.

7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த ஆயுத விற்பனையில் உள்ளடக்கப்பட்டுள்ள நீண்ட தூர ஏவுகணைகள், தாய்வான் ஜெட் விமானங்கள் மோதலில் ஈடுபட்டால் தொலைதூர இலக்குகளை தாக்குவதற்கு தேவைப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸால் இந்த ஆயுத விற்பனை அங்கீகரிக்கப்பட்டால், பில்லியன்களில் மதிப்புள்ள ஆயுத தொகுப்புகள், சமீபத்திய ஆண்டுகளில் தாய்வானுக்கு மிகப்பெரிய ஆயுதப் பரிமாற்றங்களில் ஒன்றாக இருக்கும்.

இந்த ஆயுத கொள்முதலால் தாய்வான் – சீனா இடையே மோதல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி கேய்த் ஹர்ச் திடீர் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) தாய்வானுக்கு சென்றார்.

தாய்வான் – சீனா இடையேயான மோதலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூத்த அதிகாரி தாய்வான் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஒரு பிராந்தியம் தான் தாய்வான் என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. 2016ஆம் ஆண்டு ட்சாய் ல்ங் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பின்னர், சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

தாய்வானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சீனா வான்பரப்பில் அத்துமீறி போர் விமானங்களை பறக்கவிட்டு வருகிறது. மேலும், தாய்வான் கடல்பரப்பு எல்லை அருகே கடந்த சில நாட்களாக சீனா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

தற்போது, சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக தங்கள் நாடும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.