பிக்பொஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு இன்று திருமணம்
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் டைட்டில் வின்னரான ஆரவ்வுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆரவ்வுக்கு திருமணம் என்ற செய்தி கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலான நிலையில் அது தற்போது உண்மையாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பொஸ் ஆரவ், கௌதம் மேனன் இயக்கிய ’ஜோஷுவா இமைபோல் காக்க’ என்ற படத்தின் நாயகியான ராஹே என்பவரை இன்று (ஞாயிற்றுக்கிழமை )திருமணம் செய்துகொண்டுள்ளார்.
ஆரவ்-ராஹே திருமணம் சிறப்பாக நடைபெற்றதுடன் இந்தத் திருமணத்திற்கு பிக்பொஸ் போட்டியாளர்களான காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்துமாதவி, ஹரிஷ் கல்யாண் உட்பட பலர் கலந்துகொண்டு மணமகன் மற்றும் மணமகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இது ஒரு காதல் திருமணம் என்றும் இதற்கு இரு வீட்டாரும் சம்மதித்ததை அடுத்து திருமணம் இன்று நடைபெற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஆரவ்வை காதலித்ததாக கூறப்பட்ட நடிகை ஓவியா இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை