37 ஆண்டுகள் கழித்து முந்தானை முடிச்சு' ரீமேக்!!

 


பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த ’முந்தானை முடிச்சு’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் 37 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரீமேக்கை கே.பாக்யராஜ் உருவாக்க முடிவு செய்திருப்பதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்


இந்த படத்தை ஜேஎஸ்பி சதீஷ்குமார் தயாரிக்க உள்ளதாகவும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி இந்த படத்தில் பாக்யராஜ் கேரக்டரில் சசிகுமாரும், ஊர்வசி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்யராஜ், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ள ஸ்டில் ஒன்றும் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது


37 ஆண்டுகள் கழித்து உருவாகும் பாக்யராஜின் முந்தானை முடிச்சு’ திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பணிபுரியும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.