அம்பாறையில் இரு பெண்கள் செய்த கேவலமான வேலை


அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதான வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் பிரதான வீதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளையடுத்து மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமுனை பிரதேசத்தை இரு பெண்களும் நகை கொள்வனவு செய்ய செல்வதாக கூறி முச்சக்கர ஒன்றில் சென்று மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தரான சந்தேக நபரிடம் ஹெரோயின் போதைப்பொருளை பெற்று திரும்ப வந்து கொண்டிருக்கும்போதே பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 3 கைத்தொலைபேசிகள், 20,000 ரூபா பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக கூறிய பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.