தமிழகத்தில் 5 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா...
தமிழகத்தில் நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் 5 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து மூவாயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 516 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக 5 இலட்சத்து 47 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழகத்தில் 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை