தீயில் முற்றாக எரிந்து நாசமான மரக்காலை!

 மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மாவடிச்சேனை அகமது கிராஸ் வீதியில் அமைந்துள்ள மரத் தளபாடம் செய்யும் தொழிற்சாலை நேற்று (07) இரவு தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பரவலால் மரத்தினால் செய்யப்பட்ட அலுமாரி, கட்டில், ஜன்னல் மற்றும் இயந்திரங்கள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், இதன் பெறுமதி பத்து இலட்சம் ரூபாய் என்றும் தொழிற்சாலையின் உரிமையாளர் தெரிவித்தார். Blogger இயக்குவது.