தாய்லாந்தில் கோர விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

 தாய்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பஸ்ஸொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கின் கிழக்கே 80 கிலோ மீட்டர் (50 மைல்) தொலைவில் அமைந்துள்ள ச்ச்சேவ்ங்ஸோ (Chacheongsao) பகுதியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

65 பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பஸ்ஸானது ரயில் பாதையை கடக்கும்போது துரதிர்ஷ்டவசமாக ரயிலுடன் மோதியுள்ளது.

இதன்போது 17 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்ததாக மாவட்ட தலைமை அதிகாரியான பிரதுயெங் யூகாசெம் உறுதிப்படுத்தியுள்ளார்.

காயடைந்த அனைவரும் இரண்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

விபத்து நடந்தபோது மழை பெய்து கொண்டிருந்தமையினால் பஸ்ஸின் சாரதி ரயில் வருவதை அவதானிக்கவில்லை என்றும் ஆரம்ப கட்ட தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
Blogger இயக்குவது.