ஈஸி கேஷ் ஊடாக பண மோசடி!

 பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக தம்மை அடையாளப்படுத்தி பிரதேச வர்த்தகர்களிடம் பணமோசடி செய்யும் குழு தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலகுவழி பணப் பரிமாற்றல் (ஈஸி கேஷ்) ஊடாக இந்த மோசடிகள் இடம்பெறுகின்றது.

குறிப்பாக வீரக்கெட்டிய, ஹோமாகம மற்றும் மொரகஹஹேன ஆகிய பகுதிகளில் இவ்வாறு பண மோசடிகள் அண்மை தினமாக பதிவாகியுள்ளதுடன் , பணம் அனுப்பாட்ட தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு  இலகுவழி பணப் பரிமாற்றல் (ஈஸி கேஷ்) சேவைகள் ஊடாக பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.