முல்லை தீவு ஊடகவியலாளர் தாக்குதல் தொடர்பில் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகள்!

 முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடக வியலாளர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நால்வரும் தப்பி ஓடியுள்ளார்கள்.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு வடக்கு கிழக்கினை சேர்ந்த ஊடக அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள்.

முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

மரக்கடத்தில் ஈடுபட்ட முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் தாக்குதல் நடத்திய நபர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் 20 ற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் வன வள திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடனேயே இந்த மரக்கடத்தல் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை ஆதார பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

குறித்த கும்பலின் வீட்டில் நிகழ்வு ஒன்றில் முல்லைத்தீவு மாவட்ட வனவளத்திணைக்கள உயர் அதிகாரி பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர் கூடவே நின்று கலந்து கொண்டுள்ளமைஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்புக் கிராமத்தில் மாபியாக்கள் போல செயற்படும் இந்த குழு கடந்த காலத்தில் பொலீசார் மீதும் அரச உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன்.

பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் பொலீசாருக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சாதாரண மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது?
இந்த குழு இயக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகின்றது.

பொலீசார்,வனவளத்திணைக்கள உயர் அதிகாரிளால் இந்த குழு இயக்கப்படுவதான என்ற ஜயத்திற்கான பதிலாகவே மேலே உள்ள ஒளிப்படம் காட்டிநிக்கின்றது

இந்த குழுவினை வைத்து பல நூற்றுக்கணக்கான பாலைமரங்கள் மற்றும் முதிரைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மரக்கூட்டத்தாபனத்திடம் தேக்கு மரம் அறுப்பதற்காக ஒப்பந்தம் எடுத்த நபர் ஒருவர் இந்த கும்பலை சேர்ந்தவரிடமும் பகுதியளவாள தேக்கு மரம் அறுக்கும் ஒப்பந்த்தினை கொடுத்துள்ளார்.

இதனால் மக்கள் காடுகளுக்குள் சென்று ஒரு தடிகூட வெட்டமுடியாத நிலையில் அதிகளவான தேக்குமரங்களை கொண்டு மாடிவீடு கட்டும் செயற்பாடு யாரின்அனுமதியுடன் நடைபெற்றுது இதற்கு வனவளத்திணைக்கள உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை இந்த குழுவின் முதன்மையான செயற்பாட்டாளருக்கும் பொலீஸ் அதிகாரிகளுக்கம்,வனவளத்திணைக்கள உயர் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவ்வாறான சட்டவிரோத செய்றாடுகள் இடம்பெற்று வருகின்றமை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிசென்ற நிலையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை சரணடையுமாறு பொலீஸ் அதிகாரிகளும் வனவளத்திணைக்கள உயர் அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளதாக

கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள் அவர்கள் சரணடையாவிட்டால் இரு அரச உயர் அதிகாரிகளின் பதவிக்கும் பிரச்சனையாககூடும் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.