மின்சார திருத்தப்பணிகளின் தாமதத்திற்கு இதுவே காரணம் - மின்சார சபை

 தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதால் மின்சாரத்தை துண்டிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. என வீதி அபிவிருத்தி அதிகார சபை , மின்சார சபை பொறியியாளர்கள் , உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

வவுனியாவில் காணப்படும் மின்கம்பங்கள் சரிந்து விழும் நிலையில் காணப்படுவதாக வெளியாகிய செய்திக்கு பதிலளித்த போதே அவர்கள் இதனை தெரித்தனர்.

இவ்வாறு சரிந்து காணப்படும் மின் கம்பத்தினால் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை.  தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததும் அகற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றுவதற்கு அனுமதிகள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது . 

அவ்வாறு அவசர நிலை ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சார சபை, வீதி திருத்தப்பணி உயர் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர் .கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.