மோசடியாக பரீட்சை எழுதிய மாணவன்!

 நேற்று (13) இடம்பெற்ற க.பொ.த.(உ/த) உயிரியல் பரீட்சையில் மாணவன ஒருவன் வினாக்களுக்கான விடையை ஸ்மாட் கைக்கடிகாரத்தை பயன்படுத்தி எழுதியமை அம்பலமாகியுள்ளது.

கம்பஹா பண்டாரநாயக்க ஆண்கள் பாடசாலை மாணவர் ஒருவர் இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார்.

குறித்த மாணவன் ஸ்மாட் கடிகாரத்தை பார்வையிட்டு கொண்டிருந்ததை அவதானித்த பரீட்சை மண்டப கண்காணிப்பாளர், அது தொடர்பில் பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிக்கு அறியப்படுத்தியுள்ளார். பின்னர் குறித்த மாணவரின் கைக்கடிகாரத்தை பொறுப்பேற்ற மண்டப பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

உயிரியல் குறித்த தரவுகளை மின்னிதழ் வடிவில் தமது “ஸ்மாட்” கைக்கடிகாரத்தில் உள்ளடக்கி, குறித்த மாணவன் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் இன்றைய தினமும் பரீட்சைக்கு தோற்றியுள்ளதால், அவரை கைது செய்யாது வாக்கு மூலத்தை பெற்று அவரை விடுவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற பொருளியல் விஞ்ஞான வினாத்தாளை தமது கையடக்க தொலைபேசியில் பிரதிசெய்து அதனை வெளி நபர் ஒருவருக்கு அனுப்பிய பொறளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர் தொடர்பாக குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு முறையிடப்பட்டுள்ளது.Blogger இயக்குவது.