கொவிட்-19 சிகிச்சைக்கான படுக்கைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமில்லை !

 கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக பல வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையாலும் சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் காரணமாகவும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான படுக்கைகளில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா பரவல் அச்சப்படக் கூடிய நிலைவரம் என்று கூற முடியாது. அதற்காக கவனத்தில் கொள்ள வேண்டிய நிலவரம் இல்லை என்றும் கூற முடியாது. 

மேலும் சில தொற்றாளர்கள் நிச்சயம் இனங்காணப்படுவார்கள். எவ்வாறிருப்பினும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.