யாழ். விடத்தற்பளை முகாமிலிருந்து 117 பேருக்கு வீடு செல்ல அனுமதி!

 யாழ்.விடத்தற்பளை 522 ஆவது தலைமைப் படைப்பிரிவு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 117 பேர் இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டார் நாட்டிலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில்

PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தம்புள்ளை, கண்டி, நுவரெலியா, பூநகரி,மன்னார், புத்தளம், நீர்கொழும்பு, கட்டுநாயக்கா, களுத்துறை, அம்பலாங்கொடை, அநுராதபுரம், வவுனியா, பொறவப்பொத்தான,

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே 6 பஸ்களில் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த தனிமைப்படுத்தல் முகாமில் 221 ஆண்களும் 17பெண்களும் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.