கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை!

 ஹிக்கடுவ பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர் பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழத்த பெண் தொடர்பில் , மரண பரிசோதனைகளின் பின்னர் கிடைக்கப்பொறும் தகவலுக்கமைய உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலுபே பகுதியில் கடந்த 13 ஆம் திகதி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கலுபே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த்துடன், இந்த பெண்ணை மேலதிக விணாரணைகளுக்காக பொலிஸார் தடுத்துவைத்துள்ளனர்.

பொலிஸாரின்தடுப்பு காவலில் இருந்த பெண் நேற்று திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த பெண் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் தகவல்களை அறிந்துக் கொண்ட உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும், பிரதேசவாசிகளும் இணைந்து ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டிருந்தனர்.

பொலிஸார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள பொலிஸ் தலைமையகம்,உயிரிழந்த பெண்ணின் மரண பரிசோதனை களின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.