கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு!
கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிலும் ஏனைய 18 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமுலில் உள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுகளில் இன்று அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மறு அறிவிப்பு வரும் வரையில் அது அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ள நிலையிலேயே அது மேலும் பரவாது தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் கட்டுநாயக்க சுதந்திர வர்ததக வலயத்திற்குள் உள்ள தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
அத்துடன் தொழிற்சாலைகளின் ஊழியர்கள் ஊரடங்கு அனுமதியாக தங்கள் சேவை அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கம்பாஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பகுதிகளிலும் தற்போது பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.
வெளிச்செல்லும் பயணிகள் அல்லது பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அனைத்து நபர்களும் தங்கள் விமான சீட்டு அல்லது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்தலாம் என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ததமது ஊழியர்களின் பெயர், நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் அவசரகால தொடர்புகளின் விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை